jதமிழ்சினிமா டுடே சூலை 16 சொந்த ஊர் மதுரையை சேர்ந்த தமிழ் தம்பதியினருக்கு துபாயில் பிறந்து வளர்ந்தவர் தான் நடிகை நிவேதா பெத்துராஜ் . இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் 2016 ஆம் ஆண்டு வெளியான ஒரு நாள் கூத்து என்னும் திரைப்படத்தின் மூலம் திரைக்கு அறிமுகமானவர். அவர் ஜெயம் ரவியுடன் நடித்த டிக் டிக் டிக்படத்தில் நீச்சல் உடையில் தோன்றி ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியவர், திமிரு பிடிச்சவன் என்ற படத்தில் நடிகர் விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடித்து தனது நடிப்பாற்றலை சிறப்பாக வெளியிட்டிருந்தார்.

நிவேதா பெத்துராஜ் நடிப்பு மட்டும் இல்லாமல் விளையாட்டிலும் ஆர்வம் உடையவராக உள்ளார், விளையாட்டு என்றால் விளை உயர்ந்த அஜீத்தை போன்று ரேஸ் கார் ஓட்டுவதில் விருப்பமும் திறமையும் உடையவராக உள்ளார்.

அன்மையில் இவர் ரேஸ் கார் ஓட்டுவது போன்ற புகைப்படத்தினை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. அதேபோல் நிவேதா பெத்துராஜ் குறிப்பிடுகையில் ஐக்கிய அரபு அமீராகத்தில் ரேஸ் கார் வாங்கிய இராண்டாவது இந்திய பெண் என்று பெருமையுடன் கூறினார் என்று வட்டாரங்கள் சொல்கின்றன. நம்ம விமல் போல ‍இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு என்று தான் ‍கேட்டேன் எங்க எடிட்டர் பசியே இல்லாம இருக்கு மதியம் வெளிய சாப்பிட போக வ‍ேண்டாம் போல இருக்குன்னார்… நான் நம்பிட்டேன்.

செய்தி சொல்கேட்டான் நிருபர்.
https://www.tamilcinema.today/