தமிழ்சினிமா டுடே சூலை 19 இயக்குநர் மணிரத்னம் அவர்களின் ‍மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனம் மற்றும் கியூப் சினிமா டெக்னாலாஜி ஜெயந்திர பஞ்சபாகேசன் இணைந்து உருவாக்கும் திரைஒளி திரட்டு (anthology) தான் நவரசா.

ஒன்பது சுவை ஒன்பது உணர்வுகள் என்பதை கருவாக கொண்டு உருவாகி வரும் திரைத் தொடரான இந்த நவரசா திரைப்படத்தை ஒன்பது இயக்குநர்கள் இயக்குகின்றனர்.

தனக்கென தனியான பாணியை கொண்டு மென்மையாக கதைச்சொல்லும் வசந்த் அவர்களின் இயக்கத்தில் “பாயாசம்” என்ற பகுதியை அதிதி பாலன், ரோகினி மற்றும் டெல்லி கணேஷைக் கொண்டு இயக்குகின்றார்.

மலையாளத்திரையுலகின் பாக்கியராஜ் என்று சொல்லப்படும் பிரியதர்ஷன் அவர்கள் நெடுமுடி வேணு, யோகிபாபு, ரம்யா நம்பிசன் மற்றும் மணிகுட்டன் இவர்களைக்கொண்டு “சம்மர் ஆப் 92” என்ற திரைப்பகுதியை உருவாக்குகின்றார்.

பெயரிலும் படைப்பிலும் புதுமையை காட்ட முயலும் கெளதம் மேனன்” கிட்டர் கம்பி மேலே நின்று”
என்றத் திரைப்பகுதியை அவருக்கு மிகவும் இணக்கமான சூர்யாவையும் அவருக்கு இணையாக ப்ரயகா பிரசன்னாவையும் வைத்து இயக்குகின்றார்.

மணிரத்னம் அவர்களால் நடிகராக அறிமுகப்படுத்தப்பட்ட அரவிந்த்சாமி அவர்களை அவரது நிறுவனமே அரவிந்த்சாமி அவர்களை இயக்குநராக அறிமுகப்படுத்த, அரவிந்த்சாமி அவர்கள் ரெளத்திரம் என்ற தி‍ரைப்பகுதியை ரித்விகா, ரமேஷ் திலக், ஸ்ரீராம் மற்றும் அபிநயஸ்ரீயைக் கொண்டு இயக்குகிறார்.

அதேப்போல் இன்மை என்றத் திரைப்பகுதியில் சித்தார்த், பூ பார்வதி மற்றும் பவல் நவகீதன் போன்றோர் நடிக்க ரத்தின்திரன் ஆர் பிரசாத் இயக்குகின்றார்.

“எதிரி” என்றத் திரைப்பகுதியை பிஜாய் நம்பியார் இயக்க அதில் விஜய் சேதுபதி, ப்ரகாஷ்ராஜ் மற்றும் ரேவதி போன்றோர் இணைந்து மிரட்ட வருகின்றனர்.

‍அதேப்போல் சார்ஜன் கே.எம் அவர்கள் அதர்வா, அஞ்சலி, கிஷோர் இவர்களைக் கொண்டு “துணிந்த பின்” என்ற திரைப்பகுதியையும் இயக்குகின்றார்.

பீசாப் புகழ் கார்த்திக் சுபராஜ் “பீஸ்” (அமைதி) என்ற திரைப்படத்தை பாபிசின்ஹா, கெளதம் மேனன், தருண் மற்றும் சனனந்தைக் கொண்டு இயக்குகின்றார்.

‍‍அதேப்போல கார்த்திக் நரேனின் முதல் இயக்கமாக ப்ராஜக்ட் அக்னி என்ற திரைப்டத்தை இவர் அரவிந்த் சாமி பிரசன்னா மற்றும் பூர்ணா இவர்களைக் கொண்ட இயக்குகின்றார்.

இந்த திரையொளி திரட்டு நெட்ப்ளிக்சில் ஆகஸ்ட் மாதம் வெளிவரும் என்றுச் சொல்லப்படுகின்றது, இது போன்ற திரையொளி திரட்டுகளில் உள்ள ஒரு ஆறுதல் ஒரு கதை சொதப்பினாலும் மற்றோரு கதை நம்மை நிமிர்ந்து அமரச் ச‍ெய்து விடும்.

செய்தி தமிழ்சினிமா டுடே நிருபர்.
https://www.tamilcinema.today/