இன்று நவம்பர் 18 லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பிறந்தநாள், மலையாள திரைப்படமான மனசின்னாக்கரை என்ற திரைப்படத்தில் ஜெயராமிற்கு ஜோடியாக அறிமுகமான நயன்தாரா தமிழில் சரத்குமாருக்கு ஜோடியாக அறிமுகமானார்.
தனிப்பட்ட வாழ்க்கையில் பல போராட்டாங்களையும் காதல் இழப்புகள் நேர்ந்தாலும் மனம் தளராமல் போராடி வெற்றி பெற்றவர் தான் நயன்.
நானும் ரெளடி தான், அறம் போன்ற படங்களில் அவருடைய வேடங்களும் நடிப்பிலும் அசத்தியிருந்தார். இன்றைக்கும் நயன்தாரா தனக்கென ஒரு இடத்தை பிடித்து லேடி சூப்பர் ஸ்டாராக விளங்கி வருகின்றார், அவருடை பிறந்தநாளான இன்று அவரது காதலர் விக்னேஷ் சிவன் தயாரித்து அவர் நடித்து வெளிவர இருக்கும் நெற்றிக்கண் டிசரை பிறந்தநாள் பரிசாக இன்று வெளியிட்டுள்ளார். அவரை தமிழ் சினிமா டுடே மற்றும் கோலிவுட் டுடே பிறந்தவாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.