தனுஷ் செல்வராகவன் கூட்டணி ஒரு வெற்றிக் கூட்டணி என்று தான் சொல்ல வேண்டும், அண்ணன், தம்பி இருவருக்கும் அண்மையில் வெளி வந்து சக்கை போடு போட்டதாக எந்தப்படமுமில்லை, இந்நிலையில் இருவரின் கூட்டணி பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது.
நானே வருவேன் திரைப்படத்தினை கலைபுலி தாணு அவர்கள் தயாரிக்கின்றார், யுவன் சங்கர் ராஜாவின் இசையில் வெளி வருகின்றது, இரு வேடங்களில் தனுஷ் தோன்றும், இந்த திரைப்படத்தில், நாயகன் மற்றும் வில்லனாகவும் நடிப்பதால், முந்தைய தமிழ் படங்களைப் போல இருக்குமோ?, என்ற கேள்வி திரை வட்டாரங்களில் கேட்கபட்டாலும், செல்வராகனின் திரை வடிவம் எப்போதும் வித்தியாசமானது என்று தான் கூறுகின்றனர்.
டிசர் வெளியிடப்பட்டு சமூக ஊடகங்களில் பெரிதாக பேசப்பட்டு வரும் நானே வருவேன் செப்டம்பர் இறுதி வாக்கில் வெளியிடலாம் என படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல். அதே நேரத்தில் பெரிதும் எதிர்பார்ப்பிலுள்ள பொன்னியின் செல்வன் படமும் வெளி வரும் எனத் தெரிகின்றது.

தனுஷ் தனக்கென்று ஒரு ரசிகர் வட்டத்தை வைத்துள்ளவர், அதேப்போல இயக்குநர்கள் வட்டாரத்தில் செல்வராகவனுக்கென்று எதிர்பார்ப்பும் உள்ளது. யுவனுக்கு சொல்லவே வேண்டாம். எனவே இவர்களின் கூட்டணிக்கு பொன்னியின் செல்வனால் பாதிப்பேதும் இருக்காது என்று தான் திரை வட்டாரங்கள் கூறுகின்றன.
செய்தி கோலிவுட்பாய்
https://www.tamilcinema.today/