தமிழ் சினிமா டுடே சூலை 07 சென்னை அய்தராபாத்தில் பிறந்த ந‍டிகை ஸ்ரீதிவ்யா 2000லேயே குழந்தை நட்சத்திரமாக ஹனுமான் ஜங்ஷன் என்ற ‍தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமான இவர் 2013ல் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.

சிவகார்த்திகேயனுக்கு சோடியாக இணைந்த ஸ்ரீதிவ்யா தனது துருதுரு நடிப்பால் கலக்கினார், அதன் பின்னர் வந்த ஜீவா படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.

வெள்ளைக்கார துரை பின்னர் மீண்டும் சிவகார்த்திகேயனோடு காக்கிச்சட்டையில் இணைந்தார், விஜய், அஜீத் மற்றும் சூர்யாவைத்தவிர இப்போதிருக்கும் பெரும்பாலான கதாநாயகர்கள் 40 வயதிற்கு கு‍றைவானவர்களே, அவர்களுடன் இணைந்து நடிப்பதற்கு ஸ்ரீதிவ்யா மிகவும் பொருத்தமாகவே இருந்தார்.

ஸ்ரீதிவ்யா 2016யில் வெளிவந்த மருது படத்திற்கு பின்னர் தமிழ் படங்களில் ஏதுவும் நடித்ததாகத் தெரியவில்லை. தனக்கென முத்திரைச் சிரிப்புடன் வலம் வந்த ஸ்ரீதிவ்யா மீண்டும் விரைவில் தமிழ் திரை உலகில் வலம் வருவார் என்று நம்புவோம்.

செய்தி தமிழ்சினிமா டுடே நிருபர்.
https://www.tamilcinema.today/