முன்னாள் முன்னனி கதாநாயகிகள், கதாநாயகிகளாக நடிக்கும் போது உடலை பேணி சரியான எடையையும் தோற்றத்தையும் வைத்திருப்பது, மார்கெட் குறைந்ததும் தங்களது உடலை கவனித்துக் கொள்ளாது பெரும்பாலான நடிகைகள் விட்டுவிடுகிறார்கள். ஆனால் இப்போது குஷ்பு, மீனா போன்ற பழைய கதாநாயகிகள் உடல் எடையை குறைத்து இன்றைய கதாநாயகிகளுக்கு போட்டியாக நிற்கின்றனர்.

நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக ரஜினியின் படத்தில் நடித்து பின்னர் எஜமான் படத்தில் அவருக்கு இணையாக நடித்தார், நடிப்பிலும், நடத்திலும் சிறப்பாகவேச் செய்யும் மீனா, முன்னனி கதாநாயகியாக கலக்கினார்.

பின்னர் அ்ஜீத்தின் வில்லன் திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாகத் தோன்றினார். தனக்கு மிகவும் பிடித்த நடிகை என்று மீனாவை விஜய் சொல்லியிருந்தாலும், மீனா விஜயிக்கு இணையாக நடித்ததில்லை, ஆனால் ஷாஜகான் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் வந்து ஆடினார்.

பின்னால் அவர் மலையாள படங்களில் கவனம் செலுத்தினார் அத்தோடு உடல் எடையில் கவனம் செலுத்துவது குறைந்து போனது அவரது பல மலையாளப்படங்களை பார்த்தால் தெரியும்.

இப்போது மீனா தனது உடல் எடையை குறைத்து பழைய மீனாவைப்போல தோற்றத்துடன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பார்ப்போம், விஜயின் படத்தில் எதாவது பொருத்தமான கதாபாத்திரத்தில் இருவரும் இணைகின்றார்களாவென்று.