குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா, ராஜ்கிரனின் ராசாவின் மனசிலே என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர், மீனா தான் ஏற்ற கதாபாத்திரங்கள் அனைத்தையும் சிறப்பாகவும், ‍மிகவும் அழகுனர்வோடும்(Gracefull) செய்தவர் என்று தான் சொல்ல வேண்டும், நடனத்திலும் மீனா தனக்கென ஒரு பாணியில் கடினமான முவ் மெண்டைக் கூட மிக எளிதாக செய்யக் கூடியவர்.

இளைய தளபதி விஜய் ஒரு முறை உங்களுக்கு பிடித்த நடிகை யார் என்ற போது அவர் மீனா என்றார், ஆனால் விஜய் தனது படத்தில் மீனாவை கதாநாயகி ஆக்கியதில்லை, ஆனால் ஒரு பாடலுக்கு விஜயுடன் மீனா நடனம் ஆடினார்.

அண்மைக்காலங்களாக மீனா தனது புகைப்படங்களை டிவிட்டரில் பகிர்ந்து வருகின்றார், அவர் உடல் எடையை குறைத்து, இன்றைய நாயகிகளுக்கு சாவல் விடும் அளவிற்கு தோற்றமளித்து வருகின்றார், யாருக்குத் தெரியும், விஜய் மனம் கவர்ந்த நடிகையான மீனா அப்போது வேண்டுமானால் முடியாமல் போயிருக்கலாம் ஆனால் இப்போது நாயகியாக ஜோடி சேரலாம், எல்லாம் கதையின் கையில் உள்ளது.

செய்தி பிலிம் பாய்