விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த மாஸ்டர் திரைப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதமே வெளியிட திட்டமிட்டு பணியாற்றப்பட்டது, ஆனால் கொரோனாவின் முழு ஊரடங்கால் திரைப்படம் வெளி வர இயலாமல் போனது.

தமிழக அரசு நவம்பர் 10ஆம் தேதி முதல் 50 சதவீத இருக்கை அனுமதியுடன் திரைப்படங்களை திரையிடலாம் என அறிவித்துள்ளது, இதனால் ஏப்ரல் மாதமே வெளிவந்திருக்க வேண்டிய மாஸ்டர் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 14 ஆம் தேதி வெளி வருமா? என்கின்ற பெரிய கேள்வி விஜய் மற்றும் விஜய் சேதுபதி ரசிகரகளிடையே ஓ‍டியது.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தீபாவளிக்கு மாஸ்டர் படம் ‍வெளியீடு இல்லை என்று கூறியுள்ளார், 50 சதவீதம் இருக்கைகள் மட்டுமே கொண்டு மிகப்பெரிய பட்ஜெட் படமான மாஸ்டர் வெளியிடுவது, உண்மையில் லாபகரமாக அமையாது என்பதை மனதில் கொண்டே இந்த அறிக்கை வெளியிட்டிருப்பதாக சினிமா வட்டாரங்கள் பேசிக் கொள்கின்றன, தமிழர் திருநாளாம் பொங்கலுக்கு வருகின்றாதா என்று பார்ப்போம்.