சென்னை: நடிகர் விஜய் பிறந்த நாளை ஒட்டி மாஸ் ஆக ஒரு போஸ்டர் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி முதன்முறையாக இணைந்து நடித்த படம் மாஸ்டர். பொங்கல் பண்டிகையன்று வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

இந்தாண்டு திரையரங்குகளில் ரிலீசான படங்களில் அதிக வசூல் செய்த படமும் மாஸ்டர் தான். இப்படத்தை நடிகர் விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருந்தனர்.
வருகிற ஜூன் 22-ந் தேதி நடிகர் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், அதற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் சிறப்பு போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் இதுவரை நடித்த 64 படங்களில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து வடிவமைக்கப்பட்டுள்ள அந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.