மாரி படம் கொடுத்த வெற்றி மாரி – 2 கொடுக்கவில்லை என்பது தான் உண்மை மாரி – 2 படத்தை தனுஷே தயாரித்தார், நடிப்புடன் நடனத்தில் கலக்கும் சாய் பல்லவி இந்தப் படத்தில் தனுஷ்க்கு இணையாக நடித்தார்.

படம் சரியாக போகவில்லையென்றாலும் அந்த படத்தில் இடம் பெற்ற பாடல் ரெளடி பேபி உண்மையில் பிய்த்துக் கொண்டு போனது என்று தான் சொல்ல வேண்டும்.

தனுஷ் ஏற்கனவே வொய் திஸ் கொல வெறி மூலம் உலக புகழ் பெற்றார், அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்தித்தார் என்பது பலருக்கும் தெரியும்.

அதன் தொடர்ச்சியாக அவரது ரெளடி பேபி பாடல் www.youtube.com பதிவேற்றம் செய்யப்பட்டு கிட்டதட்ட 100 கோடி பார்வையாளர்களை ‍நெருங்கியதால், youtube நிறுவனம் தனுஷ்க்கு ரூ 8 கோடி வழங்கியுள்ளது, அதனை கொண்டாடும் விதமாக தனுஷ் அதில் பங்காற்றிய கலைஞர்களுக்கு ஒரு விருந்து கொடுத்து கொண்டாடியுள்ளார்.