சூலை 21 கோடம்பாக்கம் தமிழ் திரைச் சூழலில் வளரும் ஒரு நம்பிக்கையான நடிகர் வரிசையில் நடிகர் மணிகண்டனையும் சொல்லலாம். அவர் விக்ரம் வேதாவில் நடிக்கத் தொடங்கி, காலா படத்தில் பலரின் பார்வைக்கு வந்தவர்.
சில்லுக்கருப்பட்டியில் ஒரு பகுதியில் தோன்றி மக்கள் மனதில் இடம் பிடித்தார், அதன் பிறகு வந்த ஜெய் பீம் படத்தின் பாத்திரமாகவே மாறி நடித்து தமிழ்நாட்டு சினிமா ரசிகர்களின் அனைவர் மனதிலும் இடம் பிடித்தார்.
நடிகர் முரளியின் மகன் என்ற பெயரில் திரை துறைக்குள் நுழைந்தாலும், அதர்வா தன்னுடைய நடிப்பால் திரைத்துறையில் நிற்பவர். மணிகண்டனும், அதர்வாவும் “மத்தகம்” என்னும் திரைப்படத்தில் இணைகின்றனர்.

கிடாரி திரைப்படத்தை இயக்கிய பிரசாந் முருகேசன் இந்த மத்தகம் திரைப்படத்தை இயக்குகின்றார், தர்புகா சிவா மத்தகத்தின் இசைக் கோர்வையை மேற்க் கொள்ளுகின்றார்.
மத்தகம் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளில் வெளி வருகின்றது என்றும் அண்மையில் டீசர் வெளியான நிலையில் இந்த திரைப்படத்தில் டீஸ்னி ஹாட்ஸ்டாரும் இணைந்துள்ளது, இது வெற்றிக் கூட்டணியாக தமிழ்சினிமா.டுடே வாழ்த்துகின்றது.
செய்தி
கோலிவுட் பாய்.