சூலை 21 கோடம்பாக்கம் நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் 22வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது, தமிழ் திரையுலகில் நடிப்பின் நடைமாற்றிய மாபெரும் கலைஞர். அவரை அறிமுகப்படுத்துவதோ… எழுதுவதோ, சொற்களுக்கு மொழிக்களஞ்சியத்தை அறிமுகப்படுத்துவதாகும்.
17-அக்டோபர் 1952ல் பராசக்தி தொடங்கி, 17-செப்டம்பர் 1999ல் வெளியான பூப்பறிக்க வருகின்றோம் என்கிற திரைப்படம் வரை 288 திரைப்படங்களில் நடித்தவர். அண்ணாவால் அடையாளம் காணப்பட்டவர், கலைஞர் கருணாநிதி அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டவர், தந்தை பெரியார் அவர்களால் சிவாஜி என்கின்ற பெயரினை பெற்றவர்.
தமிழ் சினிமாவை உலகம் திரும்பி பார்க்க வைத்த மகா கலைஞர் இந்திய மொழிகளில் தமிழ், தெலுங்கு கன்னடம், மலையாளம் மற்றும் இந்திப் படங்கள் என பல்வேறு மொழிப்படங்களில் நடித்தவர்.

சிவாஜி அவர்கள் 1962 இல் அமெரிக்கா நாட்டின் சிறப்பு விருந்தினராக சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, நயாகரா மாநகரின் ‘ஒரு நாள் நகரத்தந்தையாகக்’ கௌரவிக்கப்பட்டார்.
தஞ்சையின் மைந்தனாக கொண்டாடப்படும் சிவாஜி அவர்களுக்கு தஞ்சை இராமநாதன் மருத்துவமனை பேருந்து நிறுத்தம் அருகே ஆளுயுர முழு உருவச் சிலை அமைத்து பெருமைபடுத்தியுள்ளது.

தனது நடிப்பாலும், வசன உச்சரிப்பு மற்றும் ஸ்டைல் (ரஜினிக்கு முன்னோடி சிவாஜி அவர்கள் தான்) ஆகியவற்றால் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்கிய சிவாஜி அவர்களின் நினைவை போற்றுவதில் தமிழ்சினிமா.டுடே பெருமை கொள்கின்றது.
செய்தி
சிவாஜி ரசிகன்