தமிழ்சினிமா டுடே சூலை 23‍: சென்னை தமிழ் திரையுலகின் ‍ஒரு சில சமயங்கள் தவிர பெரும்பாலும் முன்னனி கதாநாயகிகள் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இருந்ததில்லை என்று தான் கூற வேண்டும்.

எம்.ஜி.யார், சிவாஜி காலத்திலிருந்த சரோஜா ‍தேவி, அஞ்சலி‍ தேவி… போன்றோர் கர்நாடகா, ஆந்திராவை ‍‍சேர்ந்தவர்கள் ‍அதேப்போல் சிம்ரன், குஷ்பு போன்ற பலரும் வெளி மாநிலத்தவர்களே.

அண்மைக்காலங்களில் அய்ஸ்வர்யா ராஜேஷ், ப்ரியா பவானிசங்கர், ரம்யா பாண்டியன் போன்ற தமிழ் பேசும் தமிழ் நடிகைகள் தமிழ் திரையுலகில் முன்னனி நடிகைகளாக மாறி வருகின்றனர்.

இதில் அய்ஸ்வர்யா ராஜேஷ் தனது சிறப்பான நடிப்பால் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார் என்றேச் சொல்லலாம், அதேப்போல் ப்ரியா பவானிசங்கரும் தமிழ் திரையுலகில் மெல்ல பிஸியாகி வருகின்றார்.

ரம்யா பாண்டியனும் இப்போது முனைப்போடு உள்ளார், இப்போது வெளியாகியுள்ள சார்பட்டா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள துஷாரா விஜயன் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனது இரண்டாவது படத்திலேயே பேசப்படும் நடிகையாக மாறி உள்ளார்.

அய்ஸ்வர்யா ராஜேஷ், ப்ரியா பவானிசங்கர், ரம்யா பாண்டியன், துஷாரா விஜயன் போன்ற தமிழ் பேசும் தமிழ் நடிகைகள் முன்னனியில் வருவதால் மொழி புரிந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

செய்தி கோலிவுட் பாய்.
https://www.tamilcinema.today/