எஸ்.பி ஜனநாதன் அவர்களின் ஆறாவது படமான லாபம் படத்தில் விஜய் சேதுபதி வேறுபட்ட பாத்திரத்தில் மட்டுமல்லாது உருவ அமைப்பிலும் வேறுபட்ட தோற்றத்தில் வருகின்றார்.
வேகமாக வளர்ந்து வந்த திரைப்படம் கொரோனா தொற்றின் காரணமாக தடைப்பட்டிருந்தது, இப்போது தளர்வு ஏற்பட்ட நிலையில் இப்போது வேகமாக படபிடிப்புகள் நடந்து இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது.
விஜய் சேதுபதியின் படபிடிப்பு பகுதிகள் வேகமாக முடிந்து தனது கடைசி நாள் படபிடிப்பில் தனது குழுவினருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.