ஒரு படத்தில் இரண்டு கதைகள், இடைவேளை வரை ஒரு கதையும், இடைவேளைக்கு பின் மற்றோரு கதையுமாக தமிழில் முதலில் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் பாலச்சந்தர், அதன் பின்னர் அது போன்ற கதைகளை யாரும் சோதனை முயற்சியாகச் செய்யவில்லை.

அண்மையில் கார்த்திக்சுப்ராஜ் ஸ்டோன் பென்ச் இது போன்ற கதை திரட்டாய்(Anthology) படத்தை வெளியிட்டது, ஹலிதா சமீம் எடுத்தச் சில்லுக்கருப்பட்டி படம் தான் இந்த கதை திரட்டு பாணியில் தமிழில் வெளிவந்து வெற்றியை ஈட்டியது மட்டுமின்றி மிக மென்மையான திகட்டாத சித்திரமாக வெளிவந்தது.

அதன் பின்னால் பாவக்கதைகள் என்ற கதை திரட்டு பாணியில் வெளிவந்த திரைப்படம் ஒரு கலவையான விமர்சனம் வந்தது, அது திரையரங்கில் வெளியிடாமல், ஒ.டி.டியில் நெட்பிளிக்ஸில் வெளியிடப்பட்டது.

இப்போது இது போன்ற கதை திரட்டு படங்கள் அதிகமாக இப்போது வெளிவர தொடங்கிய நிலையில் ‍வேல்ஸ் பிலிம் இண்டர் நேஷனல் குட்டி ஸ்டோரி என்ற திரைப்படத்தை தயாரிக்க, ‍‍கெளதம் மேனன், விஜய், வெங்கட் பிரபு மற்றும் நலன் குமாரசாமி இயக்க “குட்டி ஸ்டோரி” Anthology ( கதை திரட்டு) திரைப்படம் பிப் 12ல் வெளிவருகின்றது.

செய்தி பிலிம்பாய்.