இயக்குநர் பிரபு சாலமனின் கயல் மூலம் தமிழ் திரைக்கு அறிமுகமானவர் ஆனந்தி, அந்த கயல் படத்தில் சிறப்பாக நடித்ததால் அவருக்கு கயல் ஆனந்தி என்றே பெயரானது.

அவர் நடிக்கும் படங்களின் கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து வரும், ஜனவரி 9 எளிமையான முறையில் சாக்ரடீஸ் என்னும் இணை இயக்குநரை கரம் பிடித்தார்.

கயல் ஆனந்தி சண்டி வீரன், த்ரிஷா இல்லனா நயன்தாரா, விசாரணை, இரண்டான் உலகப்போரின் இறுதி குண்டு என்று ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பாற்றலை சிறப்பாக வெளிப்படுத்தி வந்தார் என்பது உண்‍மை, இதில் அவர் நடித்த பரியேறும் பெருமாள் படத்தில் வந்த ஜோ நடிப்பில் எல்லோர் மனதையும் கொள்ளைக் கொண்டார்.

அலாவுதீனின் அற்புத கேமரா, ஏஞ்செல், ராவண கோட்டம் படங்களில் நடித்து வரும் நிலையில் அவரது பெற்றோர் அவருக்கு திருமண ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

மணமகன் சாக்ரடீஸ் ‘அலாவுதீனின் அற்புத கேமரா’, ‘அக்னி சிறகுகள்’ ராவணக் கூட்டம், கமலி ஆகிய படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

கயல் ஆனந்தி சாக்ரடீஸ் இணையை வாழ்த்துவதில் கோலிவுட் டுடே