செப் 19 கோடம்பாக்கம் கருணாஸ் முதன்மையான கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ள ஆதார் திரைப்படம் இம்மாதம் 23-செப் அன்று உலகெங்கும் வெளி வருகின்றது. நகைச்சுவை நடிகராக தனது நடிப்பை துவங்கிய கருணாஸ், திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பாணி போன்ற திரைப்படங்களில் தனது முத்திரையை நாயகனாக நடித்து நன்றாகவே வெளிப்படுத்தியிருந்தார்.

“எளிய மனிதர்களின் வாழ்க்கை பிரதிபலிக்கும்” என்ற சொற்றோடருடன் விளம்பரங்கள் வெளியிடப்பட்டு வரும் இந்த திரைப்படம், சாமனிய மனிதர்களின் சமூக வாழ்வை பின்னனியாகக் கொண்டதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இத்திரைப்படத்தினை இயக்குநர் ராம்நாத் பழனிக்குமார் இயக்கியுள்ளார், இவர் அம்பாசமுத்திரம் அம்பானி, திருநாள் போன்ற திரைப்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படத்தில் நடிகர் அருண்பாண்டியன், பிரபாகர், நடிகை இனியா, ரித்விகா மற்றும் பல இணைய, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்திருக்கிறார்.
கவிஞர் யுரேகா பாடல் வரிக‍ளை எழுதியுள்ளார்.

இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் பி.சசிகுமார் வெண்ணிலா கிரியேஷன்ஸ் என்ற பெயரில் தயாரித்துள்ளார், இந்த திரைப்படம் வெற்றியடைய படக்குழுவினரை தமிழ்சினிமா டுடே வாழ்த்துகின்றது.

செய்தி கோடம்பாக்கம் கோவிந்தன்
https://www.tamilcinema.today/