சென்னை: தான் நடிக்கும் படங்களில் தனக்குக் கோடி ரூபாய் கொடுத்தாலும் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

அமீர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான படம் பருத்திவீரன். இப்படத்தின் வாயிலாக நடிகர் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். பின்னர் தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகரானார்.

இவரது நடிப்பில் சமீபத்தில் வெற்றி பெற்ற படம். சுல்தான். கலவையான விமர்சனம் பெற்றாலும் செம வசூல் ஈட்டியது. நடிகர் கார்த்தி, தன் படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளைத் தவிர்க்கிறார். தற்போது இதுகுறித்து கூறியுள்ள கார்த்தி, கோடி ரூபாய் கொடுத்தாலும் தன் படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்க மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் கார்த்தியைப் புகழ்ந்து வருகின்றனர்.