பிதாமகன் படத்தில் பாலா இயக்கத்தில் கஞ்சா விற்பவராக தோன்றி அசத்திய கறுப்பு ராஜா, அன்று முதல் கஞ்சா கறுப்பாக மாறினார், இயல்பான மதுரைத்தமிழ் பேசி அசத்தி, எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவர் கஞ்சா கறுப்பு.

பாலாவின் பள்ளிக்கூடத்தில் வழக்கமான மாணவரான கறுப்பு, அமீர் அவர்களின் ராம் படத்தில் குதிரை ஒட்டியாக நடித்து அந்த சிரியஸான படத்தினை ஆசுவாசப்படுத்தி அசத்தியிருந்தார்.

சிம்புத்தேவன் எடுத்தப்படத்தில் இரு நாயகர்களில் ஒருவராக வந்து பட்டையை கிளப்பியவர் கறுப்பு, பருத்தி விரன் படத்தில் டக்ளஸ் கேரக்டர் அவரது இயல்பான நடிப்பிற்கு ஒரு மைல்கல், அதேப்போல் வடிவேல் ஏற்க வேண்டிய வேடத்தினை களவாணிப் படத்தில் தான் நடித்து சிறப்பாக செய்திருந்தார்.

சொந்தமாக படம் எடுக்கின்றேன் என்று தான் கடினப்பட்டு சம்பாரித்த பணத்தை இழந்தார் மனிதன், அதன் பின்னர் பாலா ஒரு வாய்ப்பினை வழங்கினார்.

நல்லத் திறமையான நடிகர் இயல்பாக ந‍டிக்க கூடியவர், திரை உலகம் அவருக்கு திரும்பவும் வாய்ப்பினை வழங்கினால், இன்னும் பல சுற்று சுற்றும் திறமையுள்ளவர் தான் கஞ்சா கறுப்பு, அவருக்கு கோலிவுட் டுடே தனது பிறந்தநாள் வாழ்த்தினை கூறி மகிழ்கின்றது.

செய்தி குட்டி இளமதி