தமிழ் சினிமா சூன் 18, இந்த ஆண்டு வெளிவந்த படங்களில் மிகச்சிறந்த திரைப்படமாக இயக்குநர் ராஜசேகர் துரைசாமி இயக்கத்தில் வெளிவந்த “கமலி from நடுக்காவேரி” திரைப்படத்தைக் கூறலாம். திரையரங்குளில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் நாளை 19-June-2021 முதல் Zee5 OTT தளத்தில் வெளியாகிறது .

மிக இயல்பான கதையில் போக்குடன் கருத்துச் சொல்வது என்பது ஒரு மிகச்சிறந்த, அரிதான கலை, அதனை இயக்குநர் ராஜசேகர் துரைசாமி அழகாக இந்த திரைப்படத்தில் செய்து காட்டியிருந்தார்.

கதாபாத்திரங்களின் குணங்களை பார்வையாளனுக்கு போகின்ற ‍போக்கில் புரிய வைத்து அவனை எந்த வித அதிர்ச்சிக்கு உள்ளாக்காமலும், அதேப்போல் யாரும் ‍எதிர்பாராத இடத்தில் தன்னை துவளச் செய்த சொல்லே மீண்டும் நிருபிக்கச் ச‍ெய்த ஆயுதமாக காட்டிய வீதம் மிக அருமை. அந்த தருணம் பார்வையாளர்களை திரைப்படம் பார்க்கும் அநுபவத்தின் உச்சத்திற்கு கொண்டு சென்றது என்றுச் சொல்லலாம்..

இளைய வயதுகாரர்களுக்கு தாங்களே அய்.அய்.டி வளாகத்தில் சுற்றித்திரிந்த அநுபவமும், பிள்ளைகளைப் பெற்றோருக்கு தங்களது குழந்தையை வளாகத்தில் இறக்கி விட்டு உட்கார்ந்து பார்க்கும் அநுபவத்தையும் ஒரு சேரக் ‍ கொடுத்தாகவே இந்த திரைப்படம் அமைந்திருக்கும்.

இந்த திரைப்படத்தில் நடித்திருந்த அத்தனை கலைஞர்களும் சிறப்பாகச் செய்திருந்தாலும் ஆனந்தி மிகச் சிறப்பாக எந்த விதமான அதிகப்படியான நடிப்பில்லாமல், கதையோடு வாழ்ந்திருந்தார், அது தான் நாம் கதையோடு சேர்ந்து நடந்து போகும் அநுபவத்தை உண்டு செய்தது.

இயக்குநர் ராஜசேகர் துரைசாமி அவர்களுக்கு இயக்கத்தில் இந்த திரைப்படம் முதல் படமாக இருந்தாலும், சினிமா அவருக்கு புதிதல்ல என்பதை அவரது திரைக்கதை, அதில் வரும் காட்சிகள், அதனை தொடர்பு படுத்தும் விதங்கள் மூலம் புரிகின்றது.

திரையரங்குகளில் தவற விட்ட ரசிகர்களுக்கு Zee5 OTT தளத்தில் “கமலி from நடுக்காவேரி” வெளியாவதன் மூலம் ஒரு நல்ல திரைப்படம் பார்க்கும் அநுபவத்தை தரும் குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்கலாம்.

செய்தி சினிபாய் தமிழ்சினிமா டுடே