சிபிராஜ் கதாநாயகனாகத் தோன்றும் கபடதாரி படத்தினை பிரதிப் கிருஷ்ணமூர்த்தி இயக்க முனைவர் ஜீ.தனஞ்செயன் தயாரிக்கின்றார், இதில் நந்திதா, நாசர் மற்றும் ஜெயபிரகாஷ் போன்ற நடிகர்கள் நடிக்கின்றனர்.

இந்தப்படத்தின் படபிடிப்பு 2019 நவம்பர் வாக்கில் தொடங்கப்பட்டது, 2020ஆம் ஆண்டு முழுவதும் கொரோனா தொற்றினார் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது, திரைத்துறையும் முடங்கி போனது.

2021 மிகவும் உற்சாகமாக மீண்டு வருகின்றது, அதில் திரைத்துறை தான் முதலிடத்திலுள்ளது எனலாம், ஏற்கனவே மாஸ்டர், மற்றும் ஈஸ்வரன் திரைக்கு வந்து ஓடும் நிலையில், கபடதாரி படத்தை ஜனவரி 28ந் தேதி ‍வெளியிட முடிவு செய்துள்ளனர்.

தனஞ்செயன் ஒரு ‍முறை பேட்டியில் படம் சிறப்பாக வந்திருப்பதாகவும் சிபி தனது முழு ஒத்துழைப்பையும் சிறந்த நடிப்பையும் வெளிப்படுத்தியிருப்பதாகவும் கூறினார், தனது திரைப்படமானாலும், மற்ற திரைப்படமானாலும் பாராபட்சமில்லாமல் விமர்சிக்க கூடியவர், படம் ரசிக்கும்படியாக இருக்கும் என்பதில் சந்தேமில்லை வெற்றிபெற கோலிவுட் டுடே வாழ்த்தி மகிழ்கின்றது.

செய்தி பிலிம்பாய்