ஆகஸ்ட் 23 கோடம்பாக்கம், சிறந்த இசையை இளைஞர்களுக்கு வழங்குவதைப் போலவே ஜீ.வி. பிரகாஷ் இடையிடையே கதாநாயகனாகத் தோன்றி திரைப்படங்களை வழங்குவதும் வழக்கம். அவர் அரசியல்வாதிகளைப் போல இன்றைக்காக இந்த ‍‍வேலைகளை செய்வதாகத் தோன்றவில்லை ஒரு நாள் திரைத்துறையை கலக்க, இன்றிலிருந்து வேலைப் பார்ப்பதாகத்தான் தோன்றுகின்றது.

ஜீ.வி.பிரகாஷ் நடித்து விரைவில் வெளி வரப்போகும் திரைப்படம், ‘அடியே’, அவர் டிசண்ட் கேரக்டரே கிடையாது, எல்லாம் தரை லோக்கல் தான் ஆனால் இந்த ‘அடியே’ திரைப்படத்தில் கோட் சூட் போட்டு கலக்கலான தோற்றத்தை தருகின்றார்.

ஜீ.வி க்கு இணையாக கெளரி கிஷன் நாயகியாக வருகின்றார். மேலும் இந்தப்படத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு ஒரு முன்னனி கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார் என்றும் கூறுகின்றனர். புதுமுக நடிகர் மதும்கேஷ் சிறப்பு தோற்றத்தில் அறிமுகமாகிறார். மேலும் மிர்ச்சி விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

குழந்தைகளின் கல்விக்காக உதவும் பிரபா பிரேம்குமார் அவரது தீராத திரைத்துறை ஆர்வத்தால் இந்த திரைப்படத்தின் தயாரிப்பாளராக உள்ளார். இவரே சிம்புத்தேவனின் மற்றோரு படத்திற்கும் தயாரிப்பாளராக உள்ளார் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

‘திட்டம் இரண்டு’ படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ‘அடிய‍ே’ திரைப்படம் உருவாகி வருகின்றது, இந்த திரைப்படத்திற்கு கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

பொதுவாக தான் நடிக்கும் படங்களுக்கு ஜீ.வி என்றும் இசையமைப்பதில்லை அதேப்போல் இந்த திரைப்படத்திற்கும் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கிறார்.

இது அறிவியல் புனைவை அடிப்படையாகக் கொண்டு இந்த கதை உருவாகி வருகின்றது என்றும், அவர்கள் வெளியிட்டுள்ள மோஷன் பிக்சர்ஸ் கொஞ்சம் கலாட்டாவாக வந்துள்ளதாகவும் திரைத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

செய்தி வாலு
தமிழ்சினிமா.டுடே