கோலிவுட் டுடே சூலை 01: சுந்தர பாண்டியன், தர்மதுரை, பிகில் படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சௌந்தரராஜா ஒரு சாப்ட்வேர் இன்ஜினியராக பிரான்சில் வேலை செய்து சினிமா ஆர்வத்தில் வேலையை விட்டு சென்னை வந்தவர், அவர் கேஜிஎஸ் ஹீரோ போன்று தலைமுடியை வளர்த்து எடுத்துள்ள போட்டோஷூட் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் நடிகர் சௌந்தரராஜா. கதை நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும்போதே வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருகிறார். சுந்தர பாண்டியன், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம், ஜிகர்தண்டா, தெறி, பிகில் போன்ற படங்களில் கவனிக்க வைத்த சௌந்தரராஜா, தனக்கென ஒரு பாதையில் வளர்ந்து வருகிறார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களில் நடிகர் சௌந்தரராஜா, கே.ஜி.எப் ஹீரோ யாஷ் ஸ்டைலில் இருப்பதாக ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
செய்தி நாகராஜன் நிருபர்
http://www.kollywood.today