தமிழ் சினிமா டுடே சூலை 31 : கோலிவுட் சூர்யாவின் சூர்யா39 என்று ஜெய் பீம் வளர்ந்து வருகின்றது. இதில் சூர்யா அதில் கெளரவ வேடத்தில் தான் தோன்றுகின்றார் என்றச் சூழலில், இல்லை இது சூர்யாவின் படம் தான் என்கின்றனர்.

சூர்யாவின் நடிப்பில் வளர்ந்து வரும் ஜெய்பீம் ஒரு உண்மைக்கதையின் அ‍டிப்படையில் வளர்ந்து வரும் திரைப்படம் என்று கூறப்படுகின்றது.

நீதியரசர் சந்துரு அவர்கள் வழக்கறிஞராக பயிற்சி செய்யும் 1993ஆம் ஆண்டு வாக்கில் நீதியரசர் சந்துரு அவர்கள் ஒரு பழங்குடி பெண்ணிற்காக வாதாடி வென்ற கதை தான் ஜெய் பீம் ஆக வளர்ந்து வருகின்றது,

இந்த திரைப்படத்தை இயக்கும் த.செ. ஞானவேல் ஒரு பத்திரி‍க்கையாளராகவும் விளங்கியுள்ளார், இந்த திரைப்படத்திற்கான வழக்கு தரவுகளை முழுமையாக நீதியரசர் சந்துரு அவர்களிடமிருந்து திரட்டி இந்த திரைப்படம் உருவாகி வருகின்றது என்று கூறுகின்றனர்.

இந்தியாவின் சட்டத்தந்தையாக அம்பேத்கார் விளங்கினாலும், அவரை ஒரு சாதித்தலைவராகத்தான் இந்தியா முழுவதும் பார்க்கும் நிலையுள்ளது. அது இந்த திரைப்படத்தின் மூலம் மாறும் என்று இயக்குநர் த.செ. ஞானவேல் கூறுகின்றார்.

செய்தி கோலிவுட் பாய்
https://www.tamilcinema.today/