சூலை 22 கோடம்பாக்கம் கெளதம் மேனன் அவர்களால் 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் திரைப்படம் இப்போது வேகமாக வளர்ந்து இறுதிக்கட்ட பணிகள் முடிந்து விரைவில் திரைக்கு வருவதாகச் செய்தி.
இந்த திரைப்படத்தில் ரித்துவர்மா இவர்களுடன் பார்த்திபன், சீமான், மற்றும் ராதிகா சரத்குமார் நடிப்பதாகவும், இந்த திரைப்படத்தில் அய்ஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தாலும், கெளதம் மேனன் அய்ஸ்வர்யா ராஜேஷ் நடித்த காட்சிகள் முற்றிலும் நீக்கி கதையினை மாற்றி வெளியிடுவதாகத் தகவல்.

கெளதம் மேனனின் ஆஸ்த்தான இசையமைப்பாளராக இருந்த ஹரிஸ் ஜெயராஜ் இந்த திரைப்படத்திற்கு இசை அமைக்கின்றார். ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் தொடங்கிய ஒரு திரைப்படத்தை மிகத் தைரியத்துடன் மீண்டும் தூசு தட்டி முயற்சிக்கும் உண்மையில் கெளதம் மேனனுக்கு ஒரு வாழ்த்தினை தெரிவிக்கலாம்.
தனக்கென தனியான கதைச்சொல்லும் பாணியை வைத்துள்ள கெளதம் மேனனின் துருவ நட்சத்திரம் வெற்றி பெற தமிழ்சினிமா.டுடே வாழ்த்துகிறது.
செய்தி
கோலிவுட்பாய்.