2015 ஆம் ஆண்டு ஜான் வர்கீஸ் இயக்கத்தில் வெளி வந்த திகில் காமெடி திரைப்படம் “அடி கப்பியரெ கூட்டமணி” இந்த திரைப்படம் ஒரு கல்லூரி விடுதி அதில் ஒரு கறாரான விடுதி காப்பாளர், ஆண்கள் விடுதிக்குள் ஒரு நாள் இரவு உள்ளே வரும் பெண் என்றக் கதையை கொண்டு நகரும் படமாகும்.

ஆறு ஆண்டுகளுக்கு பின்னால் ஹாஸ்டல் என்ற பெயரில் சுமந்த் இராதாகிருஷ்ணன் இயக்க அசோக் செல்வன், பிரியா பவானிசங்கர், நாசர், முனிஸ்காந்த், சதிஷ் ஆகியோரின் நடிப்பில் உருவாகி வருகின்றது.

மலையாளத் திரைப்படங்கள் பெரும் பாலும் அதன் திரைக்கதையில் ஒரு நேர்த்தியுடன் உருவாக்கப்படும், ஆனால் அவர்களின் நகைச்சுவை எதார்த்தமாக அமைக்கப்படும், தமிழ் திரைப்படங்களில் அது மிகவும் குறைவு.

ஆனால் இப்போது வரும் தமிழ் திரைப்பட இளைஞர்கள் அதனை புரிந்து நன்றாகவேச் செய்கின்றனர். பார்ப்போம் ஹாஸ்டல் தங்கவதற்கு ஏற்றதாக இயக்குநர் சுமந்த் இராதாகிருஷ்ணன் தருகிறாராவென்று பார்ப்போம்.

செய்தி தமிழ்சினிமா டுடே நிருபர்
https://www.tamilcinema.today/