செப் 18 சென்னை இன்று இளைய இயக்குநர் விக்னேஷ் சிவன் அவர்களின் பிறந்தநாள் சிம்பு மற்றும் வரலட்சுமி (வரு) வை வைத்து அவர் இயக்கிய அவரது போடா போடி திரைப்படம் தமிழ் திரையுலகில் ஒரு சக்கை போடு போட்ட திரைப்படம் தான்.

விக்னேஷ் சிவன் போடா போடி திரைப்படத்திற்கு ‍முன்பே பல குறும்படங்களை இயக்கி யுள்ளார் மேலும் அவர் ஒரு விஷ்வல் கம்யூனிகேஷன் படித்த மாணவர் நடிகை வரு அவருடைய சினியரும் ஆவார்.

அதேப்போல அவர் இயக்கி நானும் ரவுடி தான் படம் ஒரு மிகப்பெரிய வெற்றிபடமாக அமைந்தது மட்டுமின்றி அவரை பெரிய இயக்குநராக தமிழ் திரையுலகில் அடையாளப்படுத்தியது.

அண்மையில் சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு நிகழ்ச்சிக்கு ஏ.ஆர். ரஹ்மான் அமைத்த பாடலுக்கும் மற்றும் கலை நிகழ்ச்சிகளையும் இயக்கியவர் இயக்குநர் விக்னேஷ் சிவன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என்று புகழப்படும் நயன்தாராவை கரம் பிடித்த இளைய இயக்குநர் விக்னேஷ் சிவனிடம் தமிழ் திரையுலகம் நல்ல திரைப்படங்களை எதிரி நோக்குகின்றது அவருக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்து சொல்லி மகிழ்கின்றது தமிழ் சினிமா டுடே.

செய்தி கோலிவுட்பாய்
https://www.tamilcinema.today/