ஜனவரி 16 செந்தமிழ்ச் செல்வன் என்று தமிழ் ரசிகர்களால் பாராட்டப்படும் விஜய் சேதுபதியின் பிறந்தநாள் ஜனவரி 16ந் தேதி ரசிகர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு மிகவும் சிறப்பாகவும், வித்தியாசமாகவும் உள்ளது என்று ரசிகர்கள் மட்டுமின்றி, திரைப்பட விமர்சகர்களும் பாராட்டியுள்ளனர்.

தமிழ் திரையுலகில் இன்றைய சூழலில் வெவ்வேறு வகையான கதாபாத்திரங்களை தெரிவு செய்து, தமிழ் திரைப்பட ரசிகர்களின் உண்மையான திரைப்பட ரசனைக்கு தீனிப் போடும் கலைஞர்களில் முதன்மையானவராக விஜய் சேதுபதி வலம் வருகின்றார் என்றால் மிகையில்லை.

அவர் நல்ல ஆரோக்கியத்துடன், சிறந்த, வித்தியாசமான வேடங்களில் தோன்றி தமிழ் ரசிகர்களை மகிழ்விப்பதோடு, தமிழ் திரைப்படத்தை அடத்த படிக்கு எடுத்துச் செல்லவும் வேண்டுமென கோலிவுட் டுடே கேட்டுக் கொண்டு பிறந்தநாளில் வாழ்த்தி மகிழ்கின்றது.

செய்தி பிலிம் பாய்