ஆக் 27 கோடம்பாக்கம் : நான்கு திரைப்படங்கள் ஒரே நாளில் கோலிவுட் வெளியீடுகின்றது, தமிழ் திரையுலகம் இப்போது முழு வீச்சில் செயல்படுவதோடு, புதிய இயக்குநர்கள் புதிய கோணங்களில் தங்களது படைப்புகளை வழங்கி வருகின்றனர்.

இந்த செப்டம்பர் 1ந்தேதி சந்தானம் மற்றும் தான்யா ஹோப் நடிக்கும் ‘கிக்’ , விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடித்திருக்கும் குஷி, இது தமிழ், தெலுங்கு,மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகின்றது.

அதேப்போல் சரத்குமார், அமிதாஷ் மற்றும் காஷ்மிரா பர்தேஷி நடிப்பில் பரம்பொருள் திரைப்படமும், யோகி பாபு, ரேச்சல் ரொபேக்கா ஆகியோர் நடித்துள்ள லக்கிமேன் திரைப்படமும் செப்டம்பர் 1ந் தேதி வெளியாகின்றது.

சந்தானத்தின் ‘கிக்’ மற்றும் யோகி பாபுவின் ‘லக்கிமேன்’ திரைப்படமும் நகைச்சுவையை மய்யமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை, விஜய் தேவரகொண்டா சமந்தா நடித்துள்ள ‘குஷி’ ஒரு ரொமாண்ஸ் காமெடியாக இருக்க வாய்ப்புள்ளது, சரத்குமார் மற்றும் அமிதாஷ் தோன்றும் பரம்பொருள் ஒரு சிரியஸ் கிரைம் திரைப்படமாக அமையும் என்பது போல் தோன்றுகின்றது.

சந்தானத்தின் ‘கிக்’ படத்தை பிரசாந்த் ராஜ் அவர்களும், லக்கிமேன் திரைப்படத்தை பாலாஜி வேணுகோபாலும், பரம்பொருள் திரைப்படத்தை அரவிந்த் ராஜ் அவர்களும், குஷி திரைப்படத்தை சிவ நிர்வானா அவர்களும் இயக்கியுள்ளனர்.

செய்தி கோலிவுட்பாய்
தமிழ்சினிமா.டுடே