தமிழ்சினிமா டுடே சூலை 15 விஷ்ணு விஷால் இன்றைய தமிழ் திரையுலகில் உள்ள இளைய நடிகர்களில் அவர் முற்றிலும் மாறுபட்ட நடிகர் என்றேக் கூறலாம், எல்லா விதமான கதாபாத்திரங்களையும் உள்வாங்கிக் கொண்டு மிகச் சிறப்பாக வெளிப்படுத்தக் கூடிய திறமையான நடிகர்.
வெண்ணிலாகபடிக்குழுவில் தொடங்கி விஷ்ணு விசால் எல்லாப்படங்களிலும் தனது தனித்துவத்தை நிருபித்துள்ளார், குள்ளநரிக்கூட்டம், நீர்ப்பறவையில் ஏற்று நடித்த அருளப்பசுவாமி கதாபாத்திரம் அவரது நடிப்பின் உச்சம் என்றேச் சொல்லலாம்.
விஷ்ணு விசாலின் அடுத்த வெளியிடூடாக வரயிருப்பது, கெளதம் மேனனின் உதவியாளராக பணியாற்றிய மாணு அனந்த் அவர்களின் முதல் படமான “FIR” ஆகும், இந்த திரைப்படம் அதிரடி மற்றும் திகில் நிறைந்த படமாக இருக்கும் என்றுச் சொல்லப்படுகிறது.

இந்தப் படத்தில் ரெபா மோனிகா ஜான், ரய்சா வில்சன், மன்ஜிமா மோகன் ஆகிய மூன்று கதாநாயகிகள், முன்னனி கதாபாத்திரத்தில் தோன்றுகின்றனர்.
விஷ்ணு விசாலின் பிறந்த தினமான சூலை 17 ஆம் தேதியன்று படக்குழுவினர் பயணம் என்ற காதல் மெலொடியை வெளியிடத்திட்டமிட்டுள்ளனராம், FIR படத்திற்கு அஸ்வாத் இசையமைத்துள்ளார், அருள் வின்சன்டின் ஒளிப்பதிவும், பிரசன்னா ஜீகேயின் எடிட்டிங்கில் வெளிவரும் இந்த திரைப்படம் விஷ்ணு விசாலுக்கு மற்றுமொரு நல்ல திரைப்படமாக அமையும் என்று படக்குழுவினர் நம்பிக்கையோடு கூறுகின்றனர். விஷ்ணு விசாலின் FIR சிறப்பாக அமைய வாழ்த்துவோம்.
செய்தி தமிழ்சினிமா டுடே நிருபர்.
https://www.tamilcinema.today/