தமிழ்சினிமா டுடே சூலை 31:கோலிவுட் விஷாலும் ஆர்யாவும் நெருங்கிய நண்பர்கள் என்பதை திரையுலகினர் அனைவரும் அறிந்ததே.
விஷால் மற்றும் ஆர்யா அவர்களின் தயாரிப்பில் சுசிந்திரன் இயக்க விஷ்ணு விசால் நடிப்பில் ஜீவா என்ற வெற்றிப்படத்தை தமிழ் திரையுலகிற்கு இருவரும் தந்ததை தமிழ் ரசிகர்கள் யாரும் மறக்க மாட்டார்கள்.

அண்மைக்காலங்களில் விஷாலின் படங்கள் அவ்வளவாக போகவில்லை என்றுத் தான் சொல்ல வேண்டும் ஆனால் காத்திருந்து அடித்த ஆர்யாவின் சார்பட்டா பெரிய வெற்றி பெற்றது
இந்நிலையில் இருவரும் இணைந்து நடிக்கும் எனிமி என்றத் திரைப்படம் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் வளர்ந்து வருகின்றது.

இந்த திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், மிராளினி ரவி, மம்தா மோகன்தாஸ் நடிக்கிறார்கள், இந்த திரைப்படத்திற்கு இசை சாம் சி.எஸ் அவர்களும் பாடல்கள் எஸ்.தமனும் எழுதுகின்றனர்.
இதில் தம்பி ராமையா, கருணாகரன் மற்றம் பலரும் தோன்றுகின்றனர்.
செய்தி கோலிவுட் பாய்
https://www.tamilcinema.today/