அக் 08 கோடம்பாக்கம் : அய்ஸ்வர்யா ராஜேஷின் புதிய திரைப்படமாக ‘ஃபர்ஹானா’ நெல்சன் வெங்கடசேன் இயக்கத்தில் வெளி வருகின்றது. அய்ஸ்வர்யா ராஜேஷ் தன்னை நிதானமாக தமிழ் திரையுலகில் வளர்த்து வரும் நடிகை.

அய்ஸ்வர்யா ராஜேஷ் அண்மையில் நடித்து ஒ.டி.டி தளத்தில் ‍தொடராக வெளியான “சூழல்” மிகுந்த வரவேற்பை பெற்றுத்தந்தது. இவர் தான் தேர்தெடுக்கும் கதாபாத்திரங்களை எப்போதும் கவனமாக தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் விதமாகவே தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றர்.

‘ஃபர்ஹானா’ திரைப்படத்தினை இயக்கும் நெல்சன் வெங்கடேசன், ஏற்கனவே ” ஒரு நாள் கூத்து” மற்றும் மான்ஸ்டர் திரைப்படங்களை இயக்கியுள்ளார், ஒரு நாள் கூத்து திரைப்படம் இன்றைய சமூகத்தை கூர்ந்து கவனித்து, அதனுடைய சிக்கல்களை சிறப்பாக பேசிய திரைப்படம்.

மான்ஸ்டர் திரைப்படம் ஒரு ஆங்கிலத் திரைப்படத்திற்கு இணையாக தமிழ் சிந்தனையுடன் எடுக்கப்பட்ட சிறப்பான திரைப்படம். அவரது மூன்றாவது படைப்பாக ‘ஃபர்ஹானா’ வெளிவருகின்றது.

இந்த திரைப்படத்திற்கு மனுஷ்யபுத்திரன் வசனம் எழுதியுள்ளார், இந்த திரைப்படத்தில் இயக்குநர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், அய்ஸ்வர்யா தத்தா, அனுமோல் மற்றும் பலர் நடித்துள்ளர்.

ட்ரீம் வாரியர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு கோகுல் பினாய் ஒளிப்பதிவும், ஜஸ்டின் இசையமைத்துள்ளார், பெண்ணின் வீரம் மற்றும் மன உறுதியை போற்றும் படமாக ‘ஃபர்ஹானா’ அமையும் என படக்குழுவினர் கூறுகின்றனர், ‘ஃபர்ஹானா’ வெற்றியடைய தமிழ்சினிமா டுடேயின் வாழ்த்துகள்

‍செய்தி கோலிவுட்பாய்