திரையுலகில் நீண்ட காலமாக இயங்கி வருபவர் இ.வி.கணேஷ் பாபு பாரதி படத்தில் முதன்முதலாக இயக்குநர் ஞானராஜசேகரன் அவர்களால் அறிமுகமாகி, ஆனந்தபுரத்து வீடு என்ற திரைப்படத்தில் குறிபிடத்தக்க கதாபாத்திரத்தில் நடித்து பெரிதும் பேசப்பட்டவர்.

இ.வி.கணேஷ் பாபு பல்வேறு நெடுந்தொடர்களில் நடித்து சுறுசுறுப்பாக இயங்கியும் வருபவர், இந்த கொரோனா காலத்தில் கொரோனா விழிப்புணர்வு படங்களை தமிழ்நாடு அரசிற்காக இயக்கியவர், அவை ஒரு விளம்பரப்படங்கள் போலின்றி, திரைப்பட பாணியில் பார்வையாளர்களை எளிதில் சென்றடையுமாறு இயக்கி தமிழக முதல்வரின் பாராட்டினையும் பெற்றவர்.

கவிதைகள், கதைகள் ‍எழுதும் இலக்கியவாதியுமான இ.வி.கணேஷ் பாபு சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடிக்க “கட்டில்” என்ற திரைப்படத்தை இயக்கி நடித்துள்ளார், அவர் கதையின் சுருக்கத்தை ரொம்ப தைரியமாக அவரது முகநூலில் வெளியிட்டும் உள்ளார்.

மனிதன் உயிரற்ற காப்பி கோப்பை, கால் செருப்பு இவற்றோடு அவனை அறியாமல் ஒன்றி விடுவது வழக்கம், அதேப்போல் உயிரற்ற “கட்டிலோடு” இணைந்த சென்டிமென்டை கொண்டு உருவான படம் தான் இந்த கட்டிலாம், கேட்கும் போது வித்தியாசமாக, உணர்வோடு கலக்கும் திரைப்படமாகத் தோன்றுகிறது. தஞ்சை மண்ணின் மைந்தனான இ.வி.கணேஷ் பாபுவின் “கட்டில்” வெற்றி பெற வாழ்த்துவோம்.

செய்தி : இளமதி.