சென்னை ஏப்ரல் 30 கே. வி. ஆனந்த் சென்னையில் உள்ள ஒரு தமிழ்த் திரைப்பட ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர். 2005-ஆம் ஆண்டு வெளிவந்த கனாக் கண்டேன் மற்றும் 2009-ஆம் ஆண்டு வெளிவந்த அயன் திரைப்படங்கள் மூலம் மக்களிடையே சிறந்த இயக்குனராகப் பெயர் பெற்றார். அதற்கு முன்னரே, பல இந்தி, தமிழ்,மலையாளம் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி உள்ளார். 1995-ஆம் ஆண்டு அவர் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய முதல் திரைப்படம் தென்மாவின் கொம்பத்து என்ற மலையாளத் திரைப்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவிற்கான தேசிய விருது பெற்றுள்ளார்,கேவி ஆனந்த் தமிழ் திரைப்படத்தின் பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார் பல படங்களை இயக்கியுள்ளார் குறிப்பாக மாற்றான், அனேகன், அயன், கோ, காப்பான், உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை

Open chat