சூலை 18 கோடம்பாக்கம் இன்றைக்கு முன்னனி நடிகர்களில் ஒருவராகவும், பாக்ஸ் ஆபிஸ் கதாநாயகனாக வலம் வருபவர் தான் சிவகார்த்திகேயன், டாக்டர் திரைப்படம் மற்றும் டான் சிறப்பாக ஒடினாலும், அதன் பிறகு வந்த பிரின்ஸ் அவ்வளவாக ஒட வில்லை.

பொதுவாக இன்றைக்கு பெரிய நடிகர்களாக வலம் வரும் நடிகர்கள், எல்லோரும், தாங்கள் நடித்த பட்ஜெட் படங்களால் தான் முன்னனிக்கு வந்தாலும், அதன் பின் அவர்கள் வியாபார நோக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் இறங்கி விடுகின்றனர்.
சிறிய பட்ஜெட் படங்களிலிருந்த சுதந்திரமும் மற்றும் படைப்பாற்றலை காட்டுவதற்கு வாய்ப்பும் பெரிய பட்ஜெட் படங்களில் இடமில்லாமல் போனாலும், சம்பளம் மற்றும் புகழுக்காக வளர்ந்த நடிகர்கள் சிறிய பட்ஜெட் பக்கம் போவதில்லை.
பிரின்ஸின் தோல்விக்கு பிறகு சிவகார்த்திகேயன் மிகவும் எதிர்பார்த்த படம் தான் மாவீரன், மாவீரன் படத்தினை ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார்.
படத்தின் கதாநாயகியாக அதிதி சங்கர் மற்றும் மிக நீண்ட இடைவெளிக்குப்பின்னர் சரிதா அவர்கள் சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக நடித்துள்ளார் சரிதா அவர்கள் சிவகார்த்திகேயனை பார்க்கும் போது அவர் ரஜீனிப் போலவே உள்ளார் என்று பாராட்டியுள்ளார்.
யோகி பாபு மாவீரன் திரைப்படத்தில் பல படங்களுக்குப் பிறகு இந்தப் படத்தில் வருகின்ற காட்சிகளில் எல்லாம் கலக்கியிருக்கிறார் என்று விமர்சகர்கள் பாராட்டுகின்றனர்.
விது அய்யனார் அவர்களின் ஒளிப்பதிவில் படம் சிறப்பாகவும் ரசிக்கும் படியாக வந்துள்ளதாகவும், மற்றும் ஒரு மாறுபட்ட கதை சொல்லும் பாணியை மடோன் அஸ்வின் இந்த திரைப்படத்தில் கையாண்டு உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கோடம்பாக்கம் வட்டாரம் மூன்று நாட்களில் மாவீரன் 50 கோடி வசூலை எட்டியுள்ளதாக கூறப்படுகின்றது. எதுவாகிலும் நல்லப்படங்களை தமிழ் ரசிகளுக்கு சிவகார்த்திகேயன் தந்தால் நல்ல செய்தி தானே.
செய்தி கோலிவுட் பாய்