சூலை 18 கோடம்பாக்கம் தமிழ் திரையுலகம் வழக்கமான கதைகளுடன் வித்தியாசமான கதை மற்றும் களங்களுடன் திரைப்படங்கள் வரத்தான் செய்கின்றது
அப்படித்தான் இயக்குநர் ராம் சங்கய்யாவின் தண்டட்டி திரைப்படமும் அமைந்துள்ளதாக திரைப்பட வட்டாரங்கள் கூறுகின்றன.

நடிகர் பசுபதி வித்தியாசமான கதைகளை தெரிவு செய்து நடிப்பதில் முதன்மை வகிப்பவர், இந்தத் தண்டட்டியில் பசுபதி ஹெட் கான்ஸ்டபில் வேடமெற்று நடித்துள்ளதாகவும், அதேப்போல் ரோகினி கிராமத்து தாயாக அசத்தி உள்ளார் என்றும் கூறப்படுகின்றது.

மக்களின் மனநிலை என்பது எப்போதும் நாம் நினைப்பது போல் ஒரே மாதிரி இருப்பதில்லை, அது சமூகத்தின் பொருளாதாரம் மற்றும் அரசியல் நிலையும் நிர்ணயிக்கிறது என்பது தான் உண்மை.

தண்டட்டி திரைப்படமும் இறந்து போன தாயின் காதில் தொங்கும் தண்டட்டியை எப்படி எடுக்க முயற்சிக்கின்றார்கள் என்பதை சமூகம் சார்ந்த பார்வையில் எடுக்கப்பட்டது தான் இந்த திரைப்படம் என்கிறார்கள்.

இந்த திரைப்படத்தின் ஒளிப்பதிவினை மகேஷ் முத்துசாமியும், இசை கோர்ப்பினை க‍ே.எஸ். சுந்தர மூர்த்தியும், படத் தொகுப்பினை சிவாவும் ஏற்றுச் சிறப்பாக செய்துள்ளனர்.

திரைப்படம் 14 சூலையிலிருந்து அமேசான் பிரைமில் வெளியாகும் என்பதை படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் திரைப்படம்‍ வெற்றியடைய தமிழ்சினிமா டுடேயின் வாழ்த்துகள்.

செய்தி கோலிவுட்பாய்.
https://www.tamilcinema.today/
https://www.kollywood.today/