2013ல் வெளியாகி பட்டித் தொட்டியெல்லாம் கலக்கிய திரைப்படம் கோகுல் இயக்கிய “இதற்குத்தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா”.
வண்ணத்து பூச்சி விளைவு (Butterfly Effect)என்கின்ற விடயத்தை சத்தமில்லாமல் பேசிய திரைப்படம் “இதற்குத்தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா” என்றுச் சொல்லலாம்.
அதன் பின்னால் கோகுல் இயக்கிய காஷ்மோரா மற்றும் ஜூங்கா படங்கள் அவ்வளவு சரியாக போகவில்லை என்பது தான் உண்மை.

இந்தச் சூழலில், “இதற்குத்தான் ஆசைப்பட்டாய் பாலகுமாரா” படத்தின் சுமார் மூஞ்சி குமார் பெயரை கொஞ்சம் மாற்றி, கொரோனா குமாரு என்று பெயரிட்டு சிம்புவுடன் இணைகின்றார்.
சிம்புவின் நகைச்சுவை மிகவும் வித்தியாசமாகவும் அது அவருக்கே உரிய பாணியிலும் இருக்கும் என்பதை அவரது போடா போடி மற்றும் வாலு படங்கள் நல்ல எடுத்துக்காட்டு.
கோகுலும் சிம்புவும் இணைந்து தரும் கொரோனா குமாரு இருவருக்கும் ஒரு நல்ல ஹிட்டாக அமைய தமிழ்சினிமா டுடே சார்பாக வாழ்த்துவோம்
செய்தி கோலிவுட் பாய்
https://www.tamilcinema.today/