கோலிவுட் டுடே சூலை 03 தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், தொலைக்காட்சி தொடர்களில் நடித்த பிரியா பவானிசங்கர், 2017ல் மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன் பின்னர் 2018ல் கடைகுட்டி சிங்கம், மான்ஸ்டர் படங்களில் நடித்து மளமளவென கோலிவுட்டில் பிசியான நடிகையாக மாறினார். 2019ல் அவருக்கு குருதி ஆட்டம், காதலில் சந்திப்போம், கசட தபற, பொம்மை போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தாலும், 2020யில் தொடங்கிய கொரோனா இன்று வரை மக்களை இயல்பு நிலைக்கு வர விடாமல் பயமுறுத்தி வருகிறது அது திரைப்படத்துறையையும் விட்டு வைக்க வில்லை, இதனால் ஒத்துக் கொண்ட படங்கள் ஏதுவும் நகராமலே உள்ளது.
இந்த நிலையில் இந்த ஆண்டு கமலின் இந்தியன் 2 படத்திலும் ஒப்பந்தமாகி உள்ளார் என்றும் தகவல், மெல்ல சத்தமில்லாமல் வளரும் பிரியா பவானிசங்கர் ஒரு வலம் வருவார் தான் போல.
செய்தி தமிழ்சினிமா டுடே நிருபர்.
https://www.tamilcinema.today