தமிழ் சினிமா டுடே சூலை 17, பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளி வரும் சார்பட்டா திரைப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிப்பது எல்லோருக்கும் தெரிந்தது தான், இந்தப் படத்தில் அவர் தனது தோற்றத்தை முழுவதும் மாற்றி நடித்துள்ளார்.

ஆர்யாவோடு, ரஞ்சித்தின் நடிகர்களான கலையரசன் போன்றோர் நடித்துள்ளதோடு இதில் பசுபதி இணைந்துள்ளார்.

வடசென்னை என்றால் வன்முறை, திருட்டு, சமூக வி‍ரோதச் செயல் என்றே திரைப்படங்களில் காட்டி பார்த்திருக்கின்றோம், ஆனால் அங்கு நீண்ட வரலா‍றுடைய கேரம் போர்டு விளையாட்டு, கால்பந்து, குத்துச்சண்டை போன்ற விடயங்களை அதிகம் பேசுவதில்லை.

இத்தோடு வட இந்திய சுபி இசையின் மேம்பட்ட வடிவான கானாவும் ஒன்று. பூலோகம் என்ற திரைப்படத்தில் வடசென்னையின் குத்துச்சண்டையை பற்றி பேசப்பட்டத்தைப் போல, சார்பட்டா ஒரு பிரியடு படம் போல வரும் என்று தோன்றுகிறது.

ஸ்டில், டிசர் எல்லாம் மிரட்டத்தான் செய்கிறது கண்டிப்பாக வழக்கமான பா.ரஞ்சித்தின் வெற்றிபடமாக இதனை எதிர்பார்க்கலாம்.

செய்தி தமிழ்சினிமா டுடே நிருபர்.
https://www.tamilcinema.today/