செப் 28 கோடம்பாக்கம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் வெளி வந்து எல்லோரின் பாராட்டுகளுடன் வெற்றி நடை ‍போடும் திரைப்படமாக இராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் வெளி வந்துள்ள ஆதார் திரைப்படம் வலம் வருகின்றது.

இந்த திரைப்படத்தில் கதையின் பாத்திரமாக மாறி வாழ்ந்துள்ள கருணாசுக்கு விருதுகள் குவிவது உறுதி என்று விமர்சக வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த திரைப்படத்தில் நடித்துள்ள பாகுபலி பிரபாகரன், உமா ரியாஷ்கான், ரித்விகா, இனியா அருண்பாண்டியன் எல்லோரும் தங்கள் நடிப்பால் கலங்கடித்துள்ளனர் என்கிறனர்.

நீண்ட இடைவெளிக்கு பின் ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் ஒரு வெற்றிபடம் வெளியாகியருப்பதில் அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. கதையின் போக்கிற்கும் சூழலுக்கும் இணக்கமான இயல்பான ஒளிப்பதிவு படத்தின் வெற்றி பெரும் துணையாக உள்ளது.

திரைப்படத்தின் வெற்றியினை தொடர்ந்து இயக்குநர் இராம்நாத் பழனிகுமாருக்கு தயாரிப்பாளர் சார்பில் வெளிநாட்டு காரை தயாரிப்பாளரின் துணைவியார் அண்மையில் வழங்கி பாராட்டி உள்ளனர்.

படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படக்குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர், வெற்றிப்படத்தை அளித்த படக்குழுவினரை தமிழ் சினிமா டுடே பாராட்டி மகிழ்கின்றது.

செய்தி கோலிவுட்பாய்.