பொங்கலுக்கு வெளியிடும் திட்டத்துடன் தயாராகி வரும் படம் தான் ஈஸ்வரன் அதன் பாடல் வெளியீட்டு விழா இன்று நடைப்பெற்றது, இந்த படத்தின் இசையமைப்பாளர் தாமனன் எஸ், இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் யூ டிப்பில் இன்று பதிவேற்றம் செய்து சக்கை போடு போட்டு வருகிறது.
இந்தப்படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளளார், அவரது தலைமையில் தான் இன்று பாடல் வெளியீடு நடைபெற்றது.
அவர் பேசும் போது, நான் கேள்விப்பட்ட சிம்பு வேறு, நான் பழகிய சிம்பு வேறு, அவர் மனதில் எதையும் மறைத்து வைத்துக் கொள்ளத் தெரியாதவர், படபிடிப்பு 7 மணியென்றால், 6:45க்கு செட்டில் இருக்கும் அவரது காலந்தவறாமையால் தான் சுசீந்திரன் 27 நாட்களில் முழு படபிடிப்பையும் முடித்தார் என்று பெருமையுடன் சிம்புவை பாராட்டி பேசினார்.
செய்தி : டிவிட்டர் திருடன்