செப் 30 கோடம்பாக்கம் : தயாரிப்பாளர் மற்றும் திரை ஆய்வாளர் திரு. தனஞ்செயன் அவர்களால் உருவாக்கப்பட்ட, பஃப்டா திரைக்கல்லூரி மாணவர்களின் இயக்கத்தில் முதல் திரைப்படமாக “மெல்லியக் கோடு” என்ற திரைப்படத்தை உருவாக்கி வருவதை மகிழ்ச்சியுடன் திரு. தனஞ்செயன் தனது டிவிட்டர் பக்கத்தில் ‍தெரிவித்துள்ளார்.

பஃப்டா திரைக்கல்லூரியின் 2017 ஆம் ஆண்டில் பயின்ற மாணவரான தர்ஷனின் இயக்கத்தில் “மெல்லியக் கோடு” வெளிவருகின்றது இத்திரைப்படத்தில், பார்த்திபன் மற்றும் சீதா இந்த திரைப்படத்தில் இணைவதாகவும் செய்தி.

இந்த திரைப்படத்தில் மனிஷா கொய்ராலா, அர்ஜுன் போன்ற திரை நட்சத்திரங்களும் தோன்றுவதாகவும் செய்தி. இதில் மனிஷா கொய்ராலா பிணமாகவே நடித்துள்ளதாகவும் தமிழ் சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

நடிகர் அர்ஜூன் அவர்களும் ‍மெல்லியக்கோடு அவருடைய திரைப்பட வாழ்வில் ஒரு முதன்மையான திரைப்படமாக அமையும் என்றும் கூறி உள்ளார்.

இளைய திரைப்பட மாணவர்கள் இயக்கும் மெல்லியக்கோடு திரைப்படம் வெற்றியடைய தமிழ்சினிமா டுடேவின் வாழ்த்துகள்