சென்னை செப் 17 : நடிகர் அதர்வா தனது நடிப்பினை நூறு சதவீதம் தான் நடிக்கும் படங்களில் வெளிப்படுத்த கூடியவர், தமிழ் திரையுலகில் நாயகர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமானதால் நிறைய இளைய நடிகர்கள் இப்பொழுதே ரிடையர்ட் ஆகி உள்ளனர்.

அதர்வா தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை எப்போதும் சரியாகவே பயன்படுத்தி வருபவர், இப்போது திரைக்கு வரும் ட்ரிகர் படத்திலும் அதனை செய்திருப்பார் என்றே தோன்றுகின்றது.

வெளியாகியுள்ள டிரைலரை பார்க்கும் பொழுது இந்தப்படத்தில் ஒரு முழு ஆக்ஷன் கதாநாயகனாக பரிணமித்துள்ளார் என்றே தோன்றுகின்றது, படத்தின் கதையை கேட்கும் போது ‍கொஞ்சம் டான் சாயல் தோன்றினாலும், கதையின் போக்கு ‍வேறு மாதிரி என்றே தோன்றுகின்றது.

திரைப்படத்தில் அருண்பாண்டியன், சின்னி ஜெயந்த், முனிஸ்காந்த், அறந்தாங்கி நிஷா முதன்மையான வேட‍மேற்று நடிக்க, தனன்யா ரவிசந்திரன் ‍அதர்வாவிற்கு இணையாகிறார். ஜீப்ரானின் இசையில் இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கும் இந்த திரைப்படத்திற்கு வசனம் இரும்புதிரை இயக்குநர் பிஎஸ் மித்ரன் எழுதியுள்ளார்.

செய்தி கோலிவுட்பாய்
https://www.tamilcinema.today/