தமிழ்சினிமா டுடே சென்னை சூலை 07 ப்ரியா ஆனந்த் தந்தை தமிழ்நாட்டை சேர்ந்தவராகவும், தாயார் தெலுங்கு மற்றும் மராத்தியும் பேசுபவராக இருந்ததால், ப்ரியா ஆனந்த் தமிழ் மற்றும் தெலுங்கை சரளமாக பேசக்கூடியவர்.
2009ல் வெளியான வாமனன் படத்தில் ஜெய்யின் படத்தில் அறிமுகமான ப்ரியா ஆனந்த் கொரோனாவிற்கு முன்பு தயாரிக்கப்பட்ட சுமோ வரை தமிழ் படங்களில் நடித்து வந்தவர் தான் ப்ரியா ஆனந்த்.
ப்ரியா ஆனந்த் நடித்த பெரும்பாலும் படங்கள் ஒரளவிற்கு ஒடியவை தான், ப்ரியா ஆனந்த் ஒரு பட்ஜெட் பட நாயகியாகவே வலம் வருபவர், அவர் சிவக்கார்த்திகேயனுடன் இணைந்து நடித்த எதிர்நிச்சல் படம் உண்மையில் பெரிய வெற்றி பெற்றது.

எதிர்நிச்சல் படத்தில் அவர்கள் நடித்த “மின் வெட்டு நாளில்” பாடல் இந்த பத்தாண்டுகளின் சிறந்த காதல் மற்றும் ரொமான்ஸ் பாடல் என்றேச் சொல்லலாம்.
கொரொனாவின் இரண்டாவது அலை கொஞ்சம் ஒய்ந்த நிலையில், மீண்டும் திரைப்படம் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பும் நிலையில் ப்ரியா ஆனந்த் மீண்டும் படபிடிப்பில் பிஸியாகி விட்டார். கொரோனா அலை ஒய்ந்த பின்னால் ப்ரியா ஆனந்தினின் அலை மீண்டும் தொடங்கி விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
தமிழ்சினிமா டுடே நிருபர்
https://www.tamilcinema.today/