நடிகர் அருண் விஜயின் நடிப்பில் இன்று வெளியாகும் சினம் திரைப்படத்தினை மூவி ஸ்டைல் நிறுவனத்தின் பெயரில் அவரது தந்தை நடிகர் விஜய்குமார் அவர்களின் தயாரிப்பில் இன்று வெளியாகின்றது.
இந்த திரைப்படத்தில் விஜய் அருணுக்கு இணையாக பாலக் லால்வனியும் மேலும் காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகின்றார். இந்த திரைப்படத்தினை ஜி. என். ஆர். குமாரவேலன் இயக்க ஷபீர் இசையமைத்துள்ளார்.
அருண் விஜய் சில படங்களில் காவல் துறை அலுவலராக வேடமேற்று நடித்துள்ளார் அவரது உருவ அமைப்பிற்கு அது கச்சிதமாக பொருந்துகின்றது என்றுத்தான் சொல்ல வேண்டும். இந்தப்படத்தில் அவர் ஒரு துணை ஆய்வாளர்( சப் இன்ஸ்பெக்டர்) வேடத்தில் நடித்துள்ளார்.
இது இன்றைய சூழலில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பெருகி வரும் பாலியல் தாக்குதலுக்கு எதிரான ஒரு திரைப்படமாக அமைந்துள்ளது என்றும் குடும்பத்துடன் காணக்கூடிய ஒரு திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளதாக படம் பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நீண்ட காலமாக ஒயாமல் போராடும் அருண் விஜயின் சினம் வெல்லட்டும்
செய்தி கோலிவுட்பாய்
https://www.tamilcinema.today/