தமிழ்சினிமா டுடே 30: கோலிவுட் இயக்குநர் ஹரி விறுவிறுப்பான வெற்றிப்படங்களை தொடர்ந்து நடிகர் விக்ரம் மற்றும் சூர்யா ஆகியோரை வைத்து சாமி, ஆறு, சிங்கம் போன்ற திரைப்படங்களைத் தந்தவர்.

அருண் விஜயின் சகோதரியின் கணவரான ஹரியிடம் அருண் விஜய் தன்னை வைத்து ஒரு ஹிட் திரைப்படம் தர பல முறை கேட்டதாகவும், அதனை அவர் தட்டி வந்ததாகவேச் சொல்லப்படுகின்றது. இதனால் அருண் விஜய் பல நேரங்களில் மனவருத்தம் அடைந்ததாகச் சொல்வார்கள்.

அண்மையில் ஹரியின் படங்கள் தொடர்ந்து நினைத்த அளவிற்கு வெற்றி கிடைக்காமல் போனது மட்டுமின்றி, சூர்யாவுடன் இணைந்து வெளி வரவிருந்த “அருவா” திரைப்படமும் ‍எதோ காரணத்தால் நின்று விட்டது.

அருண் விஜயின் நடிப்பில் அண்மையில் வந்த திரைப்படங்கள் ஒரளவிற்கு ஒடிய படங்களாகவும், அவரது நடிப்பும் அதில் சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார். இந்தச் சூழலில் மாமாவும், மச்சானுமாக இணைந்து AV 33 உருவாக்கி வருகின்றனர். இந்தப்படம் வெற்றியடையும் என்று எதிர்பார்ப்போம்.

இந்தப்படத்தில் ப்ரியா பவானிசங்கர் மற்றும் ஜீ.வி. பிரகாஷ் இணைவது மேலும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்போம்.

செய்தி கோலிவுட் பாய்
https://www.tamilcinema.today/