இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் தாயார் கொஞ்ச நாட்களாக உடல் நலம் குன்றி இருந்துள்ளார், அதற்கு அவர்களது குடும்ப மருத்துவர் மூலம் சிகிச்சை பெற்று வந்துள்ளார், நேற்று உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் இயற்கை ஏய்தினார்.

மேஸ்ட்ரோ ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் வளர்ச்சியில் அவர்களின் தாயாரின் பங்கு அளப்பறியது, தனது அத்துணை விருதுகளையும் அவர் தாயின் காலடியில் சமர்பித்தவர்.

இசைமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ்கின் பாட்டியும் ஆவார், ஜீ.வி.பிரகாஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் அவருடைய படத்தினை வெளியிட்டு ” என்றும் எங்கள் மகாராணி” என்று பொருள் படும்படியாக ஹாஸ்டெகிட்டு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

செய்தி : இலக்கியன்