சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த என்பது நாடறியும், இந்த திரைப்படத்தின் படபிடிப்பு ‍ஹைதராபாத் பிலிம் சிட்டியில் வேகமாக வளர்ந்து வந்தது, இந்தப்படத்தை வருகின்ற பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டு பணியாற்றியது அண்ணாத்த படக்குழு.

இந்நிலையில் அண்ணாத்த படக்குழுவில் பணியாற்றிய சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது, உடனே சூப்பர் ஸ்டாருக்கு பரிசோதனை செய்ததில் அவருக்கு நெகடிவ் என்றே வந்த போதும் அவர் 15 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்த பட்டுள்ளதாகத் தகவல்.

அண்ணாத்த படத்தின் படபிடிப்பு 80 சதவீதம் முடிந்து விட்டதாகவும், சூப்பர் ஸ்டாருக்கு ஒரு சண்டைக்காட்சி மற்றும் சில காட்சிகள் மட்டுமே உள்ள நிலையில், இதை அனைத்தையும் டிசம்பர் மாத இறுதிக்குள் முடித்து விடும் திட்டத்தில் தான் ஹைதராபாத் பிலிம் சிட்டியில் படபிடிப்பு வேகமாக நடந்து வந்தது, இந்த சூழ்நிலையில், படபிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி பேக்அப் செய்து திரும்பி விட்டதாக தகவல்கள் கசிகின்றன.

பொங்கலுக்கு எதிர்பார்த்த அண்ணாத்த பொங்கலுக்கு பின்னரே வரும் என்கிறார்கள் சினிமா வட்டத்தினர், டிசம்பர் 31ல் கட்சி ஆரம்பித்து பிராச்சாரத்தில் இறங்கி விட்டால் மீதமுள்ள காட்சிகளில் நடித்து படம் ‍எப்போது வெளிவரும் என்று அவரது ரசிகர்கள் ‍‍யோசிப்பதாகச் செய்தி.

தகவல் டிவிட்டர் திருடன்