சென்னை: நடிகர் அஜித்தின் வலிமை படத்தில் நெஞ்சை உருக வைக்கும் அம்மா சென்டிமென்ட பாடல் உள்ளது. அதேபோல் படத்தில் அஜித்தின் ஓப்பனிங் பாடலும் மிகச் சிறப்பாக வந்துள்ளது என்று இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.

நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் அப்டேட் கேட்டு அவரது ரசிகர்கள் வேண்டாத கோயில் இல்லை. கையில் பேனரை ஏந்தியபடி வலிமை படத்தின் அப்டேட் கேட்டு வந்தனர்.

இந்நிலையில் தான் ரசிகர்களின் கோரிக்கை உச்சத்திற்கு சென்றதை அடுத்து அஜித்தின் பிறந்த நாளான மே 1-ந்தேதி வலிமை அப்டேட் வெளியாகும் என்று தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்தார். ஆனால் அதற்குள் கொரோனா இரண்டாவது அலை வந்துவிட்டதால் அப்டேட் வெளியாகவில்லை.

இந்நிலையில் வலிமை படத்தின் இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா தற்போது அப்படம் குறித்து ஒரு சூப்பர் அப்டேட் கொடுத்துள்ளார். அதில், ‛‛வலிமை படத்தில் நெஞ்சை உருக வைக்கும் அம்மா சென்டிமென்ட பாடல் உள்ளது. அதேபோல் படத்தில் அஜித்தின் ஓப்பனிங் பாடலும் மிகச் சிறப்பாக வந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார். இது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

செய்தி நாகராஜன் நிருபர்.

Open chat