கோலிவுட் டுடே சூலை 01 சன் நெட்வோர்க் கலாநிதி மாறன் அவர்களின் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வளர்ந்து வரும் திரைப்படம் தான் “அண்ணாத்த” படம் வளரும் சூழலில் தான் ரஜினி அரசியல் நுழைவு குறித்து பல விதமாக பேசப்பட்டது.

ரஜினி அவர்களும் நான் அரசியலுக்கு வருவேன் நல்லாட்சி தருவேன் என்றவர் கடைசி நேரத்தில் தனது உடல் நிலையை காரணம் காட்டி அரசியலின் வாசல் கூட எட்டி பார்க்காமல் விலகி விட்டார். அவரது உண்மையான ரசிகர்கள் அனைவரும் அதனை மனதார வரவேற்றனர்.

“அண்ணாத்த” திரைப்படத்தின் படபிடிப்பு முழுவதும் ஹைதாராபாத்தில் நடந்து வந்தது, அப்பொழுது அந்த படபிடிப்பில் சிலருக்கு கொரானாத் தொற்று உண்டானது என்று படபிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

அதன் பின்னர் ரஜினி படபிடிப்பில் கலந்து அவருடைய பகுதிகளை முழுவதுமாக நடித்து கொடுத்து விட்டுத் தான் அவரது உடல்பரிசோதனைக்காக அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் “அண்ணாத்த” திரைப்படத்தின் வெளியீடு 04 நவம்பர் 2021யில் என்ற விளம்பரத்துடன் வெளி வந்துள்ளது.

ரஜினி அரசியலுக்கு வருவேன் என்றுச் சொல்லி வராமல் போனதில் ஆச்சரியமிருக்கலாம், ஆனால் ரஜினி அவர்களின் திரைப்படம் வெளி வரும் தேதி சொன்னா சொன்னபடி நடக்கும் என்பதில் எந்த வித ஆச்சரியமில்லை.

செய்தி கோலிவுட் டுடே.
http://www.kollywood.today